
கோயம்புத்தூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் கேட்ட முதல் கேள்வி…
என்ன ஆச்சு? என்ன செஞ்சீங்க…? ஐயா… அதை ஆங்கிலேயர்களுக்கே விற்று விட்டோம்.
ஹும் அதற்கு அந்தக் கப்பலைச் சுக்கு நூறாக உடைத்து கடலிலேயே வீசியிருக்கலாம். அந்தளவுக்கு சுதேசி ரத்தம் உடம்பில் ஊறிப்போயிருந்தவர் தான்
வள்ளியப்ப பிள்ளையின் பேரனும்
உலகநாதன் பிள்ளையுன் மகனுமாகிய
சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் இன்று!

தமிழகத்தின் சுதந்திரகால மூவேந்தர்களில் மூத்தவரான வ.உ.சியை அன்புடன் மாமா என்றே அழைப்பாராம் பாரதி. சிதம்பரனார் மனநிலையை நன்கு அறிந்த பாரதி, அவரின் மனநிலையிலிருந்து ஆங்கிலேயர்களைச் சாடி எழுதியது.
“பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? மனஸ் தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? இதில் செற்றமோ?
ஒற்றுமை வழியொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெல்லாம்
மலைவுறோம்; சித்தம் கலைவுறோம்.” – என்று வெள்ளையர்களை எதிர்த்து வ.உ.சி பேசினதாக பாரதி எழுதியுள்ளார்.
சுதேசி சிங்கத்திற்கு இன்று 147வது பிறந்தநாள்.
- ஆனந்தன் அமிர்தன்