
அரசு மருத்துவமனையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நேற்றுகாலை வழக்கம் போல் துப்புரவு தொழிலாளிகள் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளனர்.
அப்போது கழிப்பறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போய் மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குழந்தையின் உடலை மீட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு யாருடைய குழந்தை? என பதிவேட்டை பார்க்கும் போது, இது இந்த அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இல்லை என தெரியவந்தது.
யார் தான் இந்த பச்சிளம் குழந்தையை கொண்டு வந்து கழிப்பறையில் போட்டு சென்றுள்ளனர்? என்பதை கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல் துறையிலும் தகவல் தெரிவிக்கப்பட்டதுள்ளது.



