
வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் நேற்றிரவு 58 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்தது.
7.15 மணியளவில் ரயிலை சென்டிங் செய்யும் பணியில் இன்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராமல் இன்ஜின் பகுதியில் இருந்து 38வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கியது.
சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பின்னர் இது கொட்டும் மழையில் சுமார் 4மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.