December 5, 2025, 5:58 PM
27.9 C
Chennai

தேசியம் வளர்த்த வீரத் தமிழர்! பசும்பொன் தேவர் ஜயந்தி!

pasumpon thevar - 2025

தேசிய தலைவர் தேவர் ஐயா- பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர். அதிசய அரசியல்வாதி: 34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

  • நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் பரங்கியர்களை எதிர்த்து ஆயுதப் போரட்டத்தில் ஈடுபட்ட தீவிர தேசியவாதி.
  • நேதாஜி தனது அம்மாவிடம் “உங்களுடைய கடைசி மகன் இவன்” என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்.
  • “அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் பிறக்க ஆசைப் படுகிறேன்” என்றார் நேதாஜி.
  • தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.
pasumpon devar - 2025
  • நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.
  • அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய “இந்திய தேசிய ராணுவத்தில்” இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.
  • நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.
  • 3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
  • பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.
  • எனக்கு, என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை;
    நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.
  • பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
  • ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.
  • அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.
  • இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும், வென்றார்; பதவியேற்காமலே மறைந்தார்.
pasumpon devar - 2025
  • அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.
  • இரயிலில் இலவசமாகப் போக மாட்டார்.
  • சம்பளம் எதுவும் வாங்க மாட்டார்.
  • அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்க மாட்டார்.
  • இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள், தாடி வளர்த்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.
  • ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார். தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.
  • சொத்துக்கள் பெரும் பகுதியை தாழ்த்தப்பட்டோருக்கு எழுதிக் கொடுத்தவர்.
  • “சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்” என்றார்.
  • “தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்” என்றார்.
  • ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர். டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்; திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்; தூக்கி வைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.
  • ஜோதிடம், சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் என அனைத்து வகைக் கலைகளையும் அறிந்தவர்.

நேதாஜி இறந்துவிட்டார் என காங்கிரசும் ஆங்கிலேயர்களும் கட்டிய கதையைத் தகர்த்தெறிந்தவர். இறுதி வரை நேதாஜி தேவருடன் மட்டுமே ரகசிய தொடர்பில் இருந்தார். ஆன்மிகத்தின் அடையாளம்:

Muthuramalinga Thevar Jayanthi and Gurupooja started - 2025
  • தன் வாழ்நாள் முழுதும் பெண் வாடையே படாதவர்.
  • “உங்கள் அழகு மீசை பிடித்துள்ளது” ஒரு பெண் கூறியதால் , ஆண்மையின் அடையாளமான தன் மீசையை நீக்கி விட்டு இறுதி வரை வாழ்ந்தவர்.
  • தான் படுத்த படுக்கையாக இருக்கும் போதும் தனக்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் செவிலியரை ஒரு பெண் தன் உடலைத் தொடக் கூடாது என்று மறுத்தவர்.
  • இறுதிக் காலத்தில் “ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழலாம்” என்று மருத்துவர்கள் கூற, “இறைவன் கொடுத்த உடலை குறையின்றி மீண்டும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறி, அறுவை சிகிச்சையை மறுத்து, உயிரை மாய்த்துக் கொண்டவர்.
  • பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப் போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியவர்.
  • இந்து மதத்தின் தத்துவங்களை இவரளவுக்கு யாரும் அறிந்திருக்க முடியாது.
  • அவர் இறந்ததும் அவர் வளர்த்த மயில்கள் தன் உயிரை மாய்த்தது மன்னவன் வரலாறு மண்ணில் எழுதின மயில்கள்.
04 June14 Devar - 2025

சித்த வித்தையில் உயர்ந்தும் நைஷ்டீக பிரம்மச்சரியத்தின் உச்சத்தைத் தொட்டும் ஈடிணையற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் தேவர். அதனாலே சித்த வித்தையில் உள்ளவர்களுக்கும் நைஷ்டீக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கும் அவரது சீடர்களால் நடத்தப்படும் “குருபூஜை” என்ற சிறப்பு பூஜையானது.

தேவருக்கு வருடந்தோறும் சிறப்பாக நடத்தப் படுகிறது. பால்குடம் எடுத்தல், முளைப்பாரி வளர்த்தல், முடிக் காணிக்கை செலுத்துதல் முதலிய செயல்களின் மூலம் மக்கள் தேவரை தெய்வமாக வணங்குகின்றனர்.

நேருவை தவிர்த்த தேவர்: நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன போது உலக முக்கியஸ்தர்கள் பலர் ஆசிய ஜோதி என போற்றி அவரை சந்திக்க நினைத்தனர். ஆனால் நேருவோ, “நான் ஃபார்வர்டு ப்ளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்திக்க விரும்புகிறேன்” எனக் கூறி சந்தித்து கைகுலுக்க கை நீட்டினார். “என் தலைவனை (நேதாஜி) காட்டிக் கொடுத்த கையை நான் தொட மாட்டேன்” எனக் கூறி நிராகரித்து விட்டார்.

ராஜாஜி போற்றிய தேவர்: பிரம்மச்சரியத்தை கடை பிடித்ததில் இவரைப் போன்ற ஒருவரை நான் கண்டதே இல்லை.

கண்ணதாசன் வியந்த தேவர்: புகை, மது, மாது, மாமிசம் என சகல கெட்ட சுவாசம் கொண்ட நான் சொல்கிறேன். இந்த உலகில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி உண்டென்றால் அது உத்தம சீலர் பசும் பொன் தேவர் அவர்கள் மட்டுமே” என்றார். காவிய கவிஞர் திருமிகு.கண்ணதாசன் “இந்து மதத்தின் பொக்கிஷம்” எனப்படும் தனது “அர்த்தமுள்ள இந்துமதம்” நூலில்.

வரலாற்று ஆய்வாளர் மருதுபாண்டியன் “நான் ஆராய்ச்சி செய்யாத தலைவர்களே இல்லை; நான் ஆராய்ந்தவர்களிலேயே மிகப்பெரும், மிகச் சிறந்த தலைவர் தேவர்தான் என்கிறார் ( You tube Jayatv Maruthupandian speech)

இப்பேர்ப்பட்ட மாபெரும் உன்னத மகானின் பெருமைகளைத் திட்டமிட்டு மறைத்து அவருக்கு சாதீய அடையாளத்தை குத்தியது நேருவின் காங்கிரஸ்.

தேசியத் தலைவராக குன்றிலிட்ட விளக்காக அறிப்படவேண்டியவரை,
குடத்திலிட்ட விளக்காக ஆக்கினா் காங்கிரஸ்காரா்கள் காரணம் நேதாஜியுடன் அணிவகுத்து நின்றதால்!

-படித்ததில் பிடித்தது

  • இல. கணேசன் (பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories