
வங்க கடல் பகுதியில் 6ம் தேதியான நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாகை, கடலூர், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. லேசான மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதனால் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகும். இந்த புயல் வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிசா பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
7ம் தேதி வரை மத்திய தென் கிழக்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.கடந்த 24 மணி நேரத்தில், மண்டபம் பகுதியில்- 4 செ.மீ., ஆலங்குடியில்- 2 செ.மீ., பேராவூரணியில் 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அக் 1 முதல் இன்று வரை இயல்புக்கு அதிகமாக 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.