டிக் டாக்கில் காதலித்து, அதனால பிரிந்து அதிலே தேடித் துரத்தும் காதலி! காதல் போராளி!

தமிழகம் பொது தகவல்கள்
dhivya - 2026

பிரிந்து போன காதலனுக்காக இளம்பெண் ஒருவர் கண்ணீர் வீடியோ பதிவிட்டுள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்.. இவரிடம் காதல் வலையில் திவ்யா என்ற இளம்பெண் ஒருவர் விழுந்துள்ளார்.. இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர். பிஎஸ்சி பட்டதாரியும்கூட. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார். அதனால் அவரும் திவ்யாவை காதலித்தார்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்.. இவரிடம் காதல் வலையில் திவ்யா என்ற இளம்பெண் ஒருவர் விழுந்துள்ளார்.. இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர். பிஎஸ்சி பட்டதாரியும்கூட. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார்.. அதனால் அவரும் திவ்யாவை காதலித்தார்.

திவ்யா அஜித் ரசிகை.. கார்த்திக் விஜய் ரசிகர்.. இந்த மோதல்தான் காதலாக ஆரம்பமானது. இருவருமே காதலின் உச்சத்தில் இருந்தனர். அப்போது திடீரென திவ்யா டிக்டாக்கில் ஆபாச, கிளாமர் டிக்டாக் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது… இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் காதலையும் முறித்து கொண்டுள்ளார். மேலும் காதலியை பார்ப்பதும், பேசுவதையும் தவிர்த்துள்ளார்.

dhivya 1 - 2026

இது டிக்டாக் திவ்யாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. காதலனிடம் பேச பலவகையில் முயன்றும் தோற்று போனார்.. தற்கொலையே செய்து கொள்ளலாமா என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்.. ஆனாலும் தன் காதலன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளார்… அதனால்தான் பலவிதமான டிக்டாக் வீடியோ செய்து அதன்மூலம் காதலனை தேடி வருகிறார்.

அது மட்டுமல்ல… டிக்டாக் காதலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடலில் குளித்துவிட்டு மாதாவிடம் ஜெபம் செய்ய போன்ற வீடியோ ஒன்றையும் திவ்யா பதிவிட்டார்.. குளித்த பின்பு குளிரில் நடுங்கியபடியே காதலனுக்கு டிக்டாக்கில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்..

டேய் கார்த்தி.. உனக்கே தெரியும்டா நான் உண்மையா இருந்தது.. என்னை இவ்ளோ கஷ்டப்படுத்தி பார்த்துட்டே.. நீ என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை, ஏன் அத்தை பொண்ணே.. நீதான் அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா? மாமா, மாமான்னு நீ லவ் பண்றியா? அது நடக்காது” ஆனால் காதலன்தான் இன்னும் கிடைக்கவில்லை.

“காதலனை தேடுவதாக கூறி அழுது அடம்பிடித்து பதிவிடும் இந்த டிக்டாக் பெண்ணின் அலும்பலும் சேட்டையும் தாங்க முடியாமல் அந்த பையன் ஓடாமல் இருக்க வேண்டுமே” என்று கமெண்ட்கள் வந்து குவிகின்றன. கிளாமர் வீடியோவை பதிவிட போய்.. காதலன் மிரண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.