
பள்ளிகள் திறப்பின் முதல் நாளான இன்று புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று திட்டமிட்டு இருந்த நிலையில் கடுமையான கோடையின் தாக்கம் காரணமாக இரண்டு முறை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. கடந்த திங்கள்கிழமை ஜூன் ஏழாம் தேதி திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது ஆயினும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது இதனால் மாணவர்களின் நலனை முன்னிட்டு மேலும் ஒரு வாரத்துக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது.
இதை அடுத்து ஜூன் 12ஆம் தேதி இன்று ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற தொடங்கியுள்ளன. இதனால் இந்த கல்வியாண்டில் வகுப்புக்கு வந்த மாணவர்களை பல்வேறு ஆசிரியர்கள் வரவேற்று அவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளனர்.
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டு புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியைகள் ரோஜா பூ மற்றும் மரக்கன்று கொடுத்து வரவேற்றனர்.தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள், முத்துலெட்சுமி ஆகியோர் வரவேற்பு நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.