
மதிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேலூர் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார் அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது பதில் அளிக்க பின்வருமாறு:
திரு மு.க.ஸ்டாலின் அவர்களே,
எங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் நேற்று வேலூரில் பேசிய உரைக்கு உங்கள் பதிலைப் பார்த்தேன்
பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
1. ‘வாரிசு’ என்ற வார்த்தையாலும், ‘கருணாநிதி’ என்ற உங்களின் தந்தை பெயராலும்தான் நீங்கள் அரசியலில் இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். ஜனநாயகம் பற்றி தயவுசெய்து நீங்கள் எங்களுக்கு பாடம் நடத்தாதீர்கள்.
2. பாஜகவின் ஒரு பூத் தலைவர், எங்கள் கட்சிக்குள் எந்தப் பதவியையும், நமது ஜனநாயகத்தில் எந்தப் பதவியையும் வகிக்க முடியும். எங்கள் கட்சிதான் அதற்கு ஒரே உதாரணம்.
உங்கள் திமுகவில், தலைமைப் பதவிக்கு வருவதற்கு அடிப்படை அளவுகோல், அவர்கள் உங்கள் கோபாலபுரம் வீட்டில் பிறக்க வேண்டும் என்பதே. அதனால்தான், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள், உங்கள் குடும்பத்தை 3G வம்சம் (3 ஆம் தலைமுறை) என்றும் உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியை 4G வம்சம் (4 ஆம் தலைமுறை) என்றும் குறிப்பிட்டார்.
3. தயவு செய்து, உங்கள் 2004-2014 ஆட்சிக்காலம் பற்றிப் பேசாதீர்கள். இலங்கையில் 1.5 லட்சம் தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டதற்கு உங்கள் கட்சிதான் காரணம். ஊழலின் உச்சம் என்பது ஐமு கூட்டணி 1 & 2 இல் பணியாற்றிய உங்கள் கட்சியின் அமைச்சர்களுக்கு மிகவும் பொருத்தமான வார்த்தையாகும்.
4. தமிழ் மொழியும் கலாச்சாரமும் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டாதபடி ஒரு வட்டத்துக்குள் அடைபடும்படி உங்கள் கட்சி பார்த்துக்கொண்டது, உலகின் பழமையான மொழியான நமது தமிழுக்கு நீங்கள் இழைத்த மாபெரும் துரோகம் இது.
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களோ, தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். தற்போதுதான், நம் மொழி உண்மையிலேயே அதற்குத் தகுதியான கவனத்தையும் செழுமையையும் பெறுகிறது. தமிழ் மொழி பற்றிப் பேசும் கடைசி நபராகத்தான் அந்நியப் பெயரை வைத்திருக்கும் நீங்கள், இருக்க முடியும்.