பாட்டியும் 9 வயது பேத்தியும் அடுத்தடுத்து மரணம்! தாயும் 13 வயது மகளும் தீவிர சிகிச்சையில்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்!

kirthana

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கே.குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி காலையில் வீட்டில் களியும், கொள்ளு குழம்பும் செய்தார்.

பின்னர் ராஜேஸ்வரி, தனது மகள்கள் அர்ச்சனா (13), கீர்த்தனா (9), மாமியார் மாரம்மாள் (70) ஆகிய 4 பேருடன் உணவு சாப்பிட்டார். பின்னர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி காலையில் செய்த களி மற்றும் கொள்ளு குழம்பை சுட வைத்து 4 பேரும் சாப்பிட்டு விட்டு இரவு தூங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை உறவினர்கள் சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று 4 பேரும் வீடு திரும்பினார்கள். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாரம்மாளை தவிர மற்ற 3 பேரையும் மீண்டும் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்தனா பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் கே.குட்டூருக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே வீட்டில் இருந்த மூதாட்டி மாரம்மாளும் இறந்து கிடந்தார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இதைத் தொடர்ந்து சிறுமி கீர்த்தனா, பாட்டி மாரம்மாள் ஆகியோரின் உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர். தற்போது ராஜேஸ்வரியும், அர்ச்சனாவும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரி, அவரது மகள் அர்ச்சனா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

மாரம்மாள், அவரது பேத்தி கீர்த்தனா ஆகியோரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கெட்டு போன உணவை சாப்பிட்டதால் அவர்கள் இறந்தார்களா? அல்லது யாரேனும் விஷம் கலந்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்து போன கீர்த்தனா 4-ம் வகுப்பு படித்து வந்தாள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அர்ச்சனா 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories