சாத்தான்குளம்… சிபிஐ., விசாரணைக்கு முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது: நீதிமன்றம்!

madurai highcourt branch
madurai highcourt branch

ஜெயராஜ் – பென்னிக்ஸ் பிரேதப்பரிசோதனை அறிக்கை மூலம் அவர்களுக்கு மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது என்று நீதிபதிகள்கருத்து தெரிவித்தனர் மேலும் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையின் போது  கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ விசாரிக்கத் துவங்கும் வரை நெல்லை டிஐஜி விசாரிக்க இயலுமா?  இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  கேள்வி எழுப்பியது மேலும் விசாரணைக்கு தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தடயங்கள் மறைய வாய்ப்பு உள்ளன என்று நீதிபதிகள்  கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இந்த விவகாரத்தில் விசாரணையை உடனடியாக துவங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு சற்று நேரம்  விசாரணை ஒத்தி  வைக்கப்பட்டது

முன்னதாக நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக அவதூறு வழக்கிற்கு ஆளான தூத்துக்குடி ஏடிஎஸ்பி, சாத்தான்குளம் டிஎஸ்பி மற்றும் காவலர் விளக்கம் அளிக்க உத்தரவு இடப்பட்டிருந்தது. தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன…. என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் ஆஜர் ஆகினர்

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இறந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். 

சாத்தன்குளத்தில் ஊரடங்கின்போது சட்டத்தை மீறியதாக வியாபாரிகள் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவர் போலீஸரால் கைது செய்யப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். உடல் சுகவீனம் காரணமாக இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தனர்.

இது குறித்து இறந்தவர்களின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் போலீஸ் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மற்றும் காவல் அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதனிடையே காவல்துறையினர் தாக்குதல் மற்றும் மரணம் தொடர்பில் வழக்கு பதிவு செய்ய போதிய காரணங்கள் உள்ளன என்றும், சிபிஐ வழக்கு விசாரணையை ஏற்று விசாரணை துவங்கும்முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, விசாரணையை ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது, சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை ஐஜி விசாரிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அரசிடம் பேசி பதில் தரச் சொல்லி 12 மணி வரை வழக்கை ஒத்திவைத்தது. 

  • செய்தி: ரவிச்சந்திரன் மதுரை
ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories