இறந்து கிடந்த ஒரு வயது குழந்தை, தூக்கில் தொங்கும் தாய்.. கொலையா?

கிரைம் நியூஸ் தமிழகம்
meenalosini

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொளக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

ஆட்கொண்ட நத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை இவர் காதலித்தார். பிறகு 2 வருஷத்துக்கு முன்பு அவரையே கல்யாணமும் செய்தார். ஒரு வயதில் இவர்களுக்கு மீன லோச்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.
அந்த குழந்தையின் பிறந்த நாள் தற்போது சிறப்பாக கொண்டாடவும் தம்பதியினர் பிளான் செய்து வந்தனர்.

இந்நிலையில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்த பிரியங்கா மற்றும் இறந்த நிலையில் கீழே கிடந்த குழந்தை மீனலோச்சினி இருவரையும் அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.

அவர்கள் விரைந்து வந்து தாய் – மகள் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. உண்மையிலேயே இந்த சம்பவம் போலீசாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலையா என தெரியவில்லை.

பர்த்டே கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் பிரியங்கா ஆர்வமாக செய்து வந்த நிலையில்,இந்த மர்ம மரணம் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியவரும். போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.