தமிழ் எழுத்துடன் கூடிய கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகின் மூத்த நாகரிகமாக தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் எண்ணற்ற அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிந்துவெளி நாகரிகமும் கீழடி, கொடுமணல் வாழ் தமிழர் நாகரிகமும் ஒன்றே. இதற்கான ஏராளமான தரவுகள், அகழாய்வு பொருட்களாக நமக்கு கிடைத்து வருகின்றன.
இதனிடையே மதுரை செக்கானூரணி கிண்ணிமங்கலத்தில் கல்தூண் ஒன்றின் எழுத்து பிரமிக்க வைக்கிறது. இதில் ஏகன் ஆதவன் கோட்டம் என தமிழி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதன் காலம் கிமு 3-ம் நூற்றாண்டு என கணக்கிடப்படுகிறது. தமிழி எழுத்துகளில் ஆதவன், ஏகன் போன்ற எழுத்துகள் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த கல்தூண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் ஏகநாத சுவாமி மடம் என அழைக்கப்படுகிறது.
ஆகையால் இந்த மடம் அதனை சுற்றிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் கிமு 3-ம் நூற்றாண்டு கால அகழாய்வு சான்றுகள் இன்னமும் ஏராளமாக கிடைக்கும் என்பது வரலாற்று ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்