கத்தியைக் காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை!

கிரைம் நியூஸ் தமிழகம்
robbery

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நாகசுந்தரம் வீட்டில் புகுந்த 7 முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி 20 சவரன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் நாகசுந்தரம் மகன் வெங்கடேஷ் காயங்களுடன் சிங்கம்புணரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஸ்.வி.மங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.