வங்கி பெண் மேலாளர் தற்கொலை!

susaid
susaid

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கடக்கால் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (32), நாமக்கல்லில் உள்ள கனரா வங்கி கிளையில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது கணவர் அவரை விட்டுப்பிரிந்து அமெரிக்கா சென்றுவிட்டார்.

வங்கி மேலாளர் அஞ்சனா, நாமக்கல் மோகனூர் சாலை தீரன் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்ற அஞ்சனா திங்கள்கிழமை நாமக்கல் திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் வங்கி பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அஞ்சனாவின் பெற்றோர் பல முறை செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவர் போன் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் வங்கியில் அவருடன் பணிபுரியும் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் பின் அஞ்சனா வீட்டிற்கு சென்ற அலுவலர்கள் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததை அடுத்து போலீசாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஞ்சனா வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதணைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஞ்சானவின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் வேலை பார்த்து வந்த வங்கியின் சக அலுவலர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்கின்றனர் போலீசார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories