திருப்பரங்குன்றம் தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி!

madurai highcourt - 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தூணில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.

முன்னர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து ஆங்கிலேய அரசு அதைத் தடை செய்தது. அதனால், பிள்ளையார் கோவில் முன்புறம் உள்ள மோட்ச தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இன்று வரை வழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் முன்னிருந்த வழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், பின்னாளில் மாற்றப்பட்ட இந்த வழக்கத்தை முன்பு போல் மாற்றக்கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் டிச.3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி, சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. அந்த தீபத் தூண் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளது. பதிலாக மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சட்டவிரோதம். தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் – என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அறநிலையத் துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ‘பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கத்தில், ஆதாரம் இல்லாமல் மனுதாரர் மனு செய்துள்ளார்’ என வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, பிறகு திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கே நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துகளைக் கேட்ட நீதிபதி, மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தீர்ப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories