அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை செயலாளர் ஸ்வர்ணா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற விதியை அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள ஆணையை பின்பற்றி அரசு ஊழியர்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியின் போது அடையாள அட்டை அவசியம் – அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
Popular Categories




