மாருதி புதிய ஸ்பை படங்கள்! இணையத்தில் வெளியீடு!

Published:

maruthi - 2026

மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் பிரீமியம் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் மாருதி XL5 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் மாருதி XL5 காரில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், முன்புற பம்ப்பரில் ட்வீக் செய்யப்பட்ட ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றின் அருகில் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படலாம். மாருதி XL5 காரிலும் 15 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற கேபின் வடிவமைப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி யூனிட், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி XL5 மாடலில் பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இதே என்ஜின் தற்போதைய வேகன்ஆர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீட மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

Related articles

Recent articles

spot_img