
மே 8 இன்று நாரத ஜெயந்தி. அனைவருக்கும் நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
“நாரம் ததாதி இதி நாரத:” … ஞானத்தை அருளுபவர் நாரதர் என்று இதன் பொருள்.
பிரம்மாவின் மானச புத்திரரான நாரதமுனிவர் நிரந்தரம் நாராயண நாம ஸ்மரணை செய்து மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வருபவர். பல லோகங்களிலும் நடக்கும் விசேஷங்கள் எல்லாவற்றையும் மூவுலக வாசிகளுக்கும் தெரிவிப்பவர் என்று புராணங்களில் நாரதரின் குணச்சித்திரம் விவரிக்கப்படுகிறது.

ஆனால் நாரதர் கூறும் விஷயங்கள் எப்போதும் கலகங்களை வளைவிப்பதாக முதலில் தோன்றினாலும் அவை அனைத்தும் உலக நன்மைக்கான காரணங்களாகவே முடியும்.
அதனால் நாரதர்தான் முதல் பத்திரிக்கையாளராக அறியப்படுகிறார். இன்று பத்திரிக்கையாளர்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இன்று நாரத முனிவரின் பிறந்தநாளை வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். நாரத முனிவர் பகவானின் தூதர் என்றும் முக்கியமான வேத ரிஷி என்றும் அறியப்படுகிறார்.
நாரத ஜெயந்தி ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்சத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் விவரித்தபடி பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் நாரதமுனிவர் நாராயண பக்தராக அறியப்படுகிறார்.

வட இந்தியாவில் ஜேஷ்ட மாதம் கிருஷ்ணபட்சத்தின் முதல் நாள் நாரதர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் வைசாக மாதம் கிருஷ்ணபட்சத்தின் முதல்நாளான இன்று கொண்டாடப்படுகிறது.
ஒரே நாளில் கொண்டாடப்பட்டாலும் மாதத்தின் பெயர்களில் வட இந்தியாவாக்கும் தென்னிந்தியாவுக்கும் வேறுபாடு காணப்படுகிறது.
- ராஜி ரகுநாதன்