
உலகம் முழுவதும் வானொலி குறித்த முக்கியத்துவத்தை அறிய உலக வானொலி நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது.பொழுதுபோக்க எத்தனையோ நவீன கட்டமைப்பு சேவைகள் வந்தாலும் இந்த கால யுவன் யுவதிகள் பலர் வானொலி ஒலிபரப்பை கேட்பதில் குறிப்பாக செய்திகள் விளையாட்டு நேரலை வர்ணனை, நேயர் விருப்பம் கேட்பதில் ஆவலாக உள்ளனர்.
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெகுஜன மக்களின் முன்னோடியான உலக வானொலி தினத்தை, ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு பிப்ரவரி-13 உலக வானொலி நாளாக அறிவித்தது.
வானொலியின் தந்தை என அழைக்கப்படும் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி என்பவரால், 1888ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட வானொலி தொழில்நுட்பம், 1901ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலக நடப்புகள் அனைத்தும் கைக்குள் சென்போன் மூலமாக அடக்கி வைத்து கொள்கிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள முன்னோடியாக வானொலி உள்ளது. முந்தைய காலத்தில் வானொலி இல்லாத வீடுகளே இல்லை. வானொலி மூலம் திரைப்பட பாடல்கள் கேட்கவும், செய்திகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பயன்பட்டது.
வானொலி சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்காமல் இருந்தது. வானொலி மூலமாக படிக்காத மக்கள் கூட செய்திகளை அறிந்து கொள்ள வழிவகை செய்தது. இத்தகைய சிறப்பு மிக்க வானொலி குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 13 உலகம் முழுவதும் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.




