
பிள்ளையாரை எடுத்தீங்கன்னா… உங்க கடைக்கு வருவோம் என்று வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டியதாகவும், அதற்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஒரு நெத்தியடி பதிலைத் தந்ததாகவும் இப்போது சமூகத் தளங்களில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.
அண்மைக் காலமாக சரவணா ஸ்டோர்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமூகத் தளங்களில் வெளியாகும் சில கருத்துகள், இந்த நிறுவனத்தைக் குறிபார்த்து யாரோ இயங்குவது போல் பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிர்ணயிக்கப் பட்ட விலையை விட அதிக விலை வைத்து போலி ஸ்டிக்கர் ஒட்டி வியாபாரம் செய்கிறார்கள், வாடிக்கையாளரை கவனிப்பதில்லை, முரட்டுத்தனமாக நடத்துகிறார்கள் என்றெல்லாம் கூறி சில வீடியோ பதிவுகளும் உலா வந்தன.
இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் குறித்து ஒரு பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில்…

குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரின் முன்பு பிள்ளையார் உள்ளது… பிரச்சினை என்னவென்றால்… குரோம்பேட்டை அருகில் உள்ள பல்லாவரம் பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர் நாங்கள் அதிகமாக வசித்து வருகிறோம்… குறிப்பிட்ட எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோரில் வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பிள்ளையார் கோயில் இருப்பது எங்களுக்கு சங்கடமாக உள்ளதால், அதே சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள்!
அப்படி அகற்றவில்லை என்றால் எங்கள் மதத்தை சேர்ந்த மக்கள் சரவணா ஸ்டோரில் வந்து எதுவும் வாங்க மாட்டார்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்கள்!
இதற்கு நெத்தியடி பதில் தந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்,… நாங்கள் இவ்வளவு உயரம் வந்ததற்கு காரணமே எங்கள் கடவுள் பக்தி தான் என்று தெரிவித்துள்ளார்! மேலும் பிள்ளையார் கோயிலை அகற்றித்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், அப்படிப்பட்ட வியாபாரமே எங்களுக்கு தேவையில்லை என்று நெத்தியடி பதில் தந்துள்ளார் சரவணா ஸ்டோர் உரிமையாளர்!
சரவணா ஸ்டோரின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் – என்று கூறி ஒரு பதிவு உலா வருகிறது!
இதுவும் கூட அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தைக் குலைக்க யாரோ சிலர் செய்யும் வதந்தியாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள் சிலர்!



