
மூட பக்தியால் மகள்களை கொன்ற பெற்றோர்.
ஆந்திர பிரதேஷ் சித்தூரில் பெற்றோரின் மூட பக்தி மகள்கள் இருவரின் உயிரை வாங்கியது.
இரு பெண்களையும் பெற்றோரே கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் மதனபல்லி ரூரல் மண்டலம் அங்குசெட்டிபல்லெ அருகில் சிவ நகரில் இந்த சம்பவம் நடந்தது
சிவ நகரைச் சேர்ந்த புருஷோத்தம நாயுடு, அவர் மனைவி பத்மஜா தம் மகள்களான அலேக்யா (27), சாயி திவ்யா (22) இருவரையும் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர்.

சென்ற வருடம் உள்ளூரில் கட்டிக்கொண்ட சொந்த வீட்டுக்கு குடியேறினார்கள். அப்போதிலிருந்து வீட்டில் கணவனும் மனைவியும் எப்போது பார்த்தாலும் பூஜைகள் நடத்துவார்கள் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஞாயிறு இரவு கூட பூஜைகள் செய்தார். முதலில் சிறிய மகளை சூலத்தால் குத்தி கொன்றார்கள். அதன் பிறகு பெரிய மகளின் வாயில் செம்பை வைத்து தலையில் அடித்துக் கொன்றுள்ளார்கள். இந்த விஷயத்தை தானாகவே புருஷோத்தம நாயுடு ஒரு லெக்சரர் நண்பரிடம் கூறியதால் அவர் வீட்டுக்கு வந்து பார்த்து போலீசாருக்கு செய்தி தெரிவித்தார்.
பெற்றோரை போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
கொரோனா அடங்கிப் போகும் என்றும் இன்றோடு கலியுகம் முடிந்து விட்டது என்றும் சத்திய யுகம் ஆரம்பமானது என்றும் அந்த பெற்றோர் கூறுகிறார்கள் என்று மதனபள்ளி டிஎஸ்பி ரவி மனோகராசாரி கூறினார். அது மட்டுமல்ல தாம் பலிகொடுத்த பெண்கள் இருவரும் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்று அவர்கள் நம்புவதாக தெரிவித்தார்.
- பெற்றோர் இருவரும் மிகவும் சிறந்த கல்வியாளர்கள் என்றும் புருஷோத்தம நாயுடு மதனப்பல்லெ அரசு பெண்கள் டிகிரி கல்லூரியில் வைஸ் பிரின்ஸிபால் ஆக பணிபுரிகிறார். அவருடைய மனைவி பத்மஜா ஒரு கல்வி நிறுவனத்தில் கரஸ்பாண்டன்ட் மற்றும் பிரின்ஸ்பால் ஆக பணிபுரிகிறார். இறந்தவர்கள் கூட உயர்கல்வி படித்து வருகிறார்கள். பெரிய மகள் போபாலில் போஸ்ட் கிராஜுவேட் படிக்கிறார். சிறிய பெண் பிபிஏ முடித்து பிரபல ஏ ஆர் ரகுமான் மியூசிக் அகடமியில் சங்கீதம் படித்து வருகிறார்.