பிக்பாக்கெட் அடிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள்… வெளுத்து வாங்கிய உள்ளூர் மக்கள்.
மக்களோடு பேச்சுக் கொடுத்து அவர்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடுவதற்கு இருவர் முயற்சித்தபோது உள்ளூர் மக்கள் கவனித்து பிடித்து அடித்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தது.
யாருக்கும் தெரியாமல் பிக்பாக்கெட் அடிப்பதாக நினைத்துக்கொண்டு ஒருவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடும் போது இருவர் பிடிபட்டனர். அவர்களை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்ல மண்டலம் போத்தவரம் கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது.
சத்தமில்லாமல் ஒருவருடைய பாக்கெட்டிலிருந்து மூவாயிரம் ரூபாயை திருடுவதற்கு முயற்சித்தனர் இரு இளைஞர்கள். ஆனால் ஒரு சிறு சந்தடி அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது.
போத்தவரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் வந்து பேச்சுக் கொடுத்தார்கள். அவரைப் பேச்சால் மயக்கி ஏமாற்றி, சரியான நேரம் பார்த்து அவருடைய பாக்கெட்டில் இருந்து மூவாயிரம் ரூபாயை எடுப்பதற்கு முயற்சித்தார்கள். அதனை கவனித்த உள்ளூர் மக்கள்
அந்த இரு திருடர்களையும் பிடித்து போட்டு அடித்து அதன் பின்பு போலீசாரிடம் ஒப்படைத்தானர். திருடர்கள் இருவரும் தாடேபல்லிகூடத்தை சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.