பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

mango - 2026
பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.

ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.

மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இங்கு ஒருவர் மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள்.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.mango 1 - 2026மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கோடையில் வயிற்று பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

இது நோயெர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தில் இருந்து தடுக்கும். நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். இதனால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாங்காய் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்பது தெரியுமா? மேலும் பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். பச்சை மாங்காய் இரத்தம் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை உட்கொண்டால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத்துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும்.

அதற்கு பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories