December 6, 2025, 5:44 AM
24.9 C
Chennai

எந்த இலை யார் யாருக்கு அர்ச்சனை செய்ய உகந்தது ?

leafs - 2025கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்: நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை என்பது பொருளாகும்.

கடவுளை இலைகளால் அர்ச்சனை செய்வதினால் இரண்டு நன்மைகள் ஏற்படுகிறது.
முதலாவது அர்ச்சனைக்கு பயன்படும் இலையை கொடுக்கும் மரமோ, செடியோ நன்கு பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இயற்கையின் தன்மை
பாதுகாக்கப்படுகிறது.

இரண்டாவது மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல
நேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது. எண்ண கடத்திகளாக இருக்கும்
விரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து
விடுகிறது. இலையின் இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு
உடனடியாக கலப்பது தான். இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை
வழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.

இனி எந்த தெய்வத்திற்கு எந்த இலை உகந்தது எது சரி இல்லாதது என்பதை பார்ப்போம்.

திருபாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாயகன் துளசி இலையால் மகிழ்வடைகிறான். ஆனால், ஆணும் பெண்ணும் சமம் என காட்ட உடலில் ஒரு பகுதியை பெண்ணுக்கு கொடுத்து உமையொருபாகனாக நிற்கும் பசுபதிநாதன் வில்வ இலையால் மகிழ்வடைகிறான். அண்ட பகிரெண்டமெல்லாம் திரிசூலத்தில் ஆட்டி வைக்கும் அன்னை பராசக்தி வேப்ப இலையாலும், கலை கடவுளான வாணி தேவியை நாவில் நிறுத்தி உயிர்களை எல்லாம் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பிரம்மன் அத்தி இலையாலும், பிரணவ வடிவாக திரும்பும் இடமெல்லாம் காட்சி தரும் கணபதி வன்னி இலையாலும், அருகம் புல்லாலும் மகிழ்வடைகிறார்கள்.

வேழமுகத்து விநாயகனுக்கு துளசி இலை பிடிக்காது. கங்கை தாங்கிய சிவபெருமானுக்கு தாழம்பூ, ஊமைத்தை எருக்க மலர் ஆகாது. ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமனுக்கு அட்சதை சரிவராது. தும்பை மலர் லஷ்மிக்கும், பவளமல்லி சரஸ்வதிக்கும் ஒவ்வாது.

எல்லாம் சரி இலைகள் மனித எண்ணங்களை பிரபஞ்சத்தில் கலக்கிறது என முதலில் சொன்னேன். அப்படி கலப்பதற்கு எந்த இலையாக இருந்தால் என்ன? இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும். இது ஆகாது. என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா? என்று சிலர் யோசிக்கலாம். அவர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

சுவாமி விக்கரத்தை பிரஷ்டை செய்யும் போது மந்திர ஆவாகனம் செய்வது மரபு. மந்திரம் என்பது சப்த்த வகைகளின் அலைவரிசையாகும். அந்த அலைவரிசைகளுக்கு ஏற்ற அதிர்வுகளை கொடுத்தால் தான் விரும்பியதை அடையலாம். குறிப்பிட்ட மந்திர ஆவகனத்துக்கு ஏற்றவாறு மந்திர அலைவரிசைகளை சில இலைகளால் தான் செய்ய முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் இந்த தெய்வத்துக்கு இந்த இலை ஆகாது என சொன்னார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories