மீனவர்களுக்கான செயலி தூண்டில்! பயன்படுத்துகிறீர்களா?

அடடே... அப்படியா? துணுக்குகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

THOONDIL app - 2026எல்லாத் துறையிலும் டிஜிட்டல் இந்தியா பிரகாசித்துக் கொண்டு வருகிறது. இந்த நேரத்தில், டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலமாக மீனவர்களும் நன்மை அடையும் வகையில் செல்போன் செயலி ஒன்றை கடந்த வருடம் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதனை அறிமுகப் படுத்தினார்.

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளை ஒட்டி 13 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன.

இந்தப் பகுதியில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டுமரங்கள், பாய்மரப்படகுகள், துடுப்புப் படகுககளில், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.com.coastal.dss .thoondil - 2026

இந்த மீனவர்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக ஆன்ட்ராய்ட் செயலியை தமிழக அரசு தூண்டில் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.

தூண்டில் ஆன்ட்ராய்டு செயலியை “Thoondill” என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது மீனவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் உள்ளது என்கிறார்கள். மீனவர்களே.. உங்கள் மொபைல் போனில் இந்த செயலி இருக்கிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.