ஏப்ரல் 14, 2021, 1:11 காலை புதன்கிழமை
More

  அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்த அமித் ஷா

  2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக., துணைத் தலைவருமான கே.அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே பிரசாரம் செய்தார்.

  வேலாயுதம்பாளையம் உயர் நிலைப்பள்ளி அருகே பிரச்சாரத்தை தொடங்கும் முன்பு, பாஜக நிர்வாகிகள் சார்பில் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

  சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை, ஊர்வலமாக திறந்தவெளி வேனில் வந்து கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார் அமித் ஷா.

  பின்னர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலைக்கு வாக்களிக்குமாறு கோரி, பொதுமக்களிடையே பேசினார் அமித் ஷா….

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  twelve − one =

  Translate »