
ஏப்.17ம் தேதி, மும்பை வாங்கனி ரயில்வே நிலையத்தில்…
பார்வை தெரியாத தாயின் கையைப் பிடித்தபடி, ரயில்வே நடைமேடையில் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென நடைமேடையில் இருந்து தவறி விழுந்தான். பதைபதைத்து அந்தத் தாய் கலவரப் பட்டுக் கத்தினார்… நடந்த விபரீதம் உணர்ந்து அவரால் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலையில்
விருட்டென்று ரயில் பாதையிலேயே ஓடி வந்தார் ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்க். கண நேரத்தில் அந்தச் சிறுவனைத் தூக்கி பிளாட்பாரத்தில் பத்திரமாக சேர்த்துவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தானும் அந்த நடைமேடையில் எகிறிக் குதித்தார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுவனைக் காப்பாற்றிய ரயில்வே பணியாளரை அனவரும் பாராட்டினர். இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலானது.
தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை, தனது உயிரைப் பயணம் வைத்து ரயில்வே பணியாளர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை உடனே ரயில்வே மண்டல தலைமை அதிகாரி மற்றும் பணியாளர்கள் பாராட்டினர். சமுகத் தளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.