வெள்ளக்காடான சென்னை மாநகரம்!

Published:

வெள்ளக்காடான சென்னை மாநகரம்… தண்ணீர் வெளியேறவில்லை… மின்சாரம் இல்லை..! யாரும் வரவில்லை!

சென்னையின் மையப்பகுதியான தேனாம்பேட்டை தான் நீங்கள் காணும் இடம்… எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சி தருகிறது. குறிப்பாக எஸ்ஐடி காலேஜ் அமைந்துள்ள ரோடு பாரதிதாசன் சாலை, சீதம்மாள் காலனி, சீதம்மாள் காலனி விரிவாக்கம், திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் ரோடு ஒட்டியுள்ள பகுதி, சிபி ராமசாமி சாலை என எங்கும் வெள்ளக் காடாய் காட்சி தருகிறது.

இங்கு போடப்பட்டுள்ள சாலை உயரமாக இருப்பதால் ஆங்காங்கே சாலையை மீறி வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரை உடனே அகற்றக் கோரி சென்னை மாநகராட்சியிடம் கோரி வருகிறோம்.

தொடர்ந்து 2 நாட்களாக இந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டிருக்கிறது. முதல்வரின் வீடு இருக்கும் சித்தரஞ்சன் சாலைக்குப் பின்புறம் உள்ள திருவள்ளுவர் சாலையில்தான் இந்த அவல நிலை காணப்படுகிறது. இங்கே வந்து பார்ப்பதற்கும் தண்ணீரை அகற்றுவதற்கும் எந்த அதிகாரிகளும் வரவில்லை. மாநகராட்சி அதிகாரிகளும் எவரும் இங்கே வரவில்லை.

இதையடுத்து பொதுமக்கள் தங்கியிருக்கக் கூடிய திருவள்ளுவர் சாலையில் ஒரு போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img