திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் நடராஜன் (45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன. இவர் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரில் பணி நிமித்தமாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் தனது வீட்டில் தனிமையில் சந்தித்து உறவாடிய போது அப்பகுதி பொதுமக்கள் இவர்களை கையும் களவுமாக பிடித்து , இருவரையும் திட்டியது போன்ற வீடியோ காட்சி நேற்று தினம் இரவு முதல் வாட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவியது. நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் டி.எஸ்.பி. ரமேஷ் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனலட்சுமி ஆகியோர் சம்பந்தபட்ட ஏட்டு நடராஜன் மற்றும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏட்டு நடராஜன் இரு சக்கர வாகன சோதனையின் போதும், பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது ஒரு சிலரிடம் இரு சக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாலும், அந்த பிரச்னைக்குரிய நபர்கள் இவரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆடைகளை களைந்து வீட்டினுள் தள்ளி தகராறு செய்ததுடன், பழி வாங்கும் நோக்கத்துடன் வீடியோ எடுத்ததாக ஏட்டு நடராஜன் தெரிவித்துள்ளார்.ஆனாலும் சம்மந்தப்பட்ட பெண்மணி தான் இன்றுதான் வந்ததாகவும் ,தன்னை மன்னித்து விடும்படியும் காலில் விழ முனைகிறார் ,மேலும் இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சம்பவத்தில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவரும் புகார் பற்றி பேசுவதற்குத்தான் சென்றேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.புகார் கொடுக்க காவல் நிலையம் இருக்க வீட்டுக்கு வந்தது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது ,காவலர் தன்னை பழி வாங்க வேண்டும் என்பதற்காக வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆடைகளை களைந்து வீட்டினுள் தள்ளி தகராறு செய்தாக சொல்லி இருக்கிறார் ,ஆனால் பெண்மணியோ புகார் குறித்து பேச தான் வந்தாக சொல்கிறார் ,இதில் காவலரின் வாக்கும் மூலம் பொய் எனத் தெரியவருகிறது,மேலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டை திறப்பதில் இருந்து வீடியோ எடுத்துள்ளனர் அதில் அந்தப் பெண்மணி உள்ளே இருப்பது தெளிவாக தெரிகிறது ,மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதாக விசாரணையில் தெரிய வந்ததும், மேலும் டிஎஸ்பி மற்றும் போலீசார் ராஜேஸ்வரி நகர் சென்று இவரது வசிக்கும் வீட்டின் அருகே விசாரித்ததில் மேற்கண்ட வீடியோவில் எந்தவித முகாந்திரம் இல்லை என்றும் தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது, இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்காக இருப்பதாகவும். சிறைபிடித்ததாக கூறப்படுவர்களை அழைத்து விசாரித்த பிறகு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கண்ணால் காண்பதும் போய் ,காதால் கேட்பதும் பொய் ,தீர விசாரிப்பதே மெய் என்றாலும் இந்த சம்பவம் குறித்த வீடியோவை போலீஸ் தரப்பில் உண்மை இல்லை சொல்லபடுகிறது ,வேலியே பயிரை மேய்ந்தது என்கிற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது