கரூர்: கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி தொடக்கத்தினையொட்டி விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், நவராத்திரி விழா தொடக்க நிகழ்ச்சியாக, ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு, துர்க்கை அலங்காரங்கள் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரங்களுடன் மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனையை தொடர்ந்து ஸ்ரீவிஷ்ணு துர்க்கை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பிகை அருள் பெற்றனர்.



