திருவெம்பாவையின் “பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்” என்று தொடங்கும் 10ஆவது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.
பாதகமலங்கள் கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாகவும், மலர்களால் அலங்கரிப்பட்ட திருமுடியோ மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கக்கூடிய ஈசனை நான் எவ்விதம் பாடுவேன் என்று அவன் மேல் கொண்ட பக்தியால் இறைஞ்சி, ““அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யார்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை தான் யாது?,” என்று கேட்கிறார் மாணிக்கவாசகர்.
வாருங்கள் நாமும் இந்த மார்கழியில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை பக்தியுடன் பாடுவோம்!



