கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் 57 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 584 காளைகள் 287 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்தும் அலுவலரும் ஆய்வுக் குழு உறுப்பினரான மருத்துவர் எஸ்.கே.மித்தல். கரூர் எஸ்.பி. ராஜசேகரன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.. விஜயபாஸ்கர், குளித்தலை தொகுதி எம்எல்.ஏ. ராமர் .ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளைகளின் உரிமையளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினர்.
அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் காண திருச்சி. கரூர் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு வந்து கலந்து கொண்டு, ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு காணொளிக் காட்சி…