ஆக… முத்தமிழ் வித்தவர் மகனின்… சானத… சானதை… சாதைனை… !

சற்றுமுன் தமிழகம் திருச்சி வீடியோ

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதியின் மகனுக்கு சனாதன தர்மத்தை வேரறுப்போம் என எழுதி வெச்சதைக் கூட படிக்க வரலையே.. என்று கேலி செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்த மாநாட்டுக்கு சனாதனத்தை வேரறுப்போம் என்று தலைப்பிட்டிருந்தார்கள்.

சனாதனம் என்றால் பழைமை! சனாதன இந்து மதத்துக்கு எதிரான, நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை, கலாசார நடைமுறைகளை வேரறுப்போம் என்று திரட்டிய இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸார், திமுக., மதிமுக., என தோழமைக் கட்சிகள் அணி திரண்டன.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினால், சனாதனம் என்ற சொல்லைக் கூட சரியாக உச்சரிக்க முடியவில்லை. வழக்கம் போல் தடுமாறினார்.

சாதன.. சதான.. சானத… தர்மத்தை… என்றெல்லாம் மு.க.ஸ்டாலின் தட்டுத் தடுமாறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அண்மையில் மேற்கு வங்கத்துக்குச் சென்றுவிட்டு, அங்கே வங்க மொழியில் பேசுவதாகச் சொல்லி வாய் குளறி வாங்கிக் கட்டிக் கொண்ட ஸ்டாலினை, இப்போது வெச்சி செய்யிறாங்க என்றுதான் சொல்ல முடியும்!


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.