
ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டம் உள்ளது.
இம்மாவட்டதின் ஜா தரா பகுதியில் உள்ள மசூதிக்கு வெள்ளிக்கிழமையான இன்று வழக்கம்போல் மக்கள் தொழுகைக்கு சென்றனர்.
தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 20 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



