வெளியான மிஸ் இந்தியா டைட்டில் ரிவல் டிசர்!

Published:

kirthi suresh 1 - 2026

கீர்த்தி சுரேஷ் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள். இவர் குழந்தையாக இருக்கும் போதே சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தன் முதல் படத்திலே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நடித்தார். மேலும் அந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இது எந்த ஒரு கதாநாயகிக்கும் கிடைக்காத ஒரு அறிமுகம்.

தனது முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி பலரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு ரிங் மாஸ்டர், தமிழில் இது என்ன மாயம் போன்ற படங்களில் நடித்தார் இதற்கு பிறகு ரஜினி முருகன் படம் அவருக்கு தமிழில் நல்ல பெயரை பெற்று தந்தது.

kirthi suresh - 2026

அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். 2018ஆம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளி வந்த மகாநடி படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதோடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இதில் நடிகையர் திலகம் சாவித்ரி போலவே மிகச் சிறப்பாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது அவர் மிஸ்.இந்தியா எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்கி வருகிறார் நரேந்திர நாத். மகேஷ்.எஸ்.கோனேரு ஈஸ்ட் கோஸ்ட் புரடக்ஸன் மூலம் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மிஸ்.இந்தியா பட செட்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் மற்றும் படத்தின் மேக்கிங் வெளியிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக கொஞ்சம் உடல் எடையை குறைத்து படத்தில் நடித்து வருகிறார் என்று தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img