
சினிமா உலகத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கு திரையுலகம் கைப்பற்றியிருக்கிறது
1990ஆம் ஆண்டு கர்த்தவ்யம் திரைப்படத்திற்காக டோலிவுட்டில் இருந்து விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் அவரை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோகான் மகா நடி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் நடிகையான மேனகா தம்பதிகளுக்கு 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் பிறந்தவர் கீர்த்தி. இவருக்கு ரேவதி என்ற சகோதரியும் உண்டு.
கீர்த்தி சுரேஷ் குபேரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்தார் மேலும் கதாநாயகன் கதாநாயகியாக பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு மலையாளத்தில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் தனது பள்ளிப்படிப்பை சென்னை மற்றும் கேரளாவில் முடித்தவர் கல்லூரியில் பேஷன் டிசைனிங் துறையில் பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்த பிறகு தனது தந்தையின் விசனத்தை கவனித்தார் தமிழில் முதல் படம் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படம் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்றுத் தந்தது.
அதற்கடுத்து ஒன்றிரண்டு படங்கள் வெளியானாலும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினி முருகன் படம் மாபெரும் வெற்றி பெற்று கீர்த்தி சுரேஷின் அந்தஸ்தை தூக்கி நிறுத்தியது.

அதற்கடுத்ததாக வெளி வந்த ரெமோ சீமராஜா படம் மாபெரும் வெற்றி பெற தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகினார். இந்த காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது நடிப்பை நிலை நிறுத்தினார்.
தமிழில் தனுஷுடன் தொடரில் விஜயுடன் பைரவா சர்க்கார் மற்றும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 சண்டைகோழி2 நடிகையர்-திலகம் போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் தற்போது ஒரு ரவுண்டு வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவருடைய பல படங்கள் வெளிவர உள்ளன. கீர்த்தியின் அம்மா ஒரு மேனகா ஒரு நடிகை என்பது அனைவருக்கும் தெரியும் தற்போது கீர்த்தியின் பாட்டி சரோஜாவும் ஹீரோயின் ஆகிவிட்டார்.

அவர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசனுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளிவந்த தாதா87 படத்தில் இவர் நடித்திருக்கிறார் நான் என்னோட அம்மாவை கூட இப்ப போட்டியா நினைக்கல பாட்டியதான் இப்ப போட்டியாக நினைக்கிறேன்.
தினமும் அவரை நடிக்கச் சொல்லி கதை சொல்லிட்டு போறாங்க என்கிறார் கீர்த்தி சுரேஷ் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் இருப்பதாக கூறி வருகிறார் அவருடைய திரை உலக மற்றும் சமூக சேவைகள் தொடர வாழ்த்துவோம்.
source: கலைமகள் தீபாவளி மலர்



