spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆலயங்கள்77 கோயில்களின் முப்பரிமாண காட்சி! இணையத்தில் அறநிலைத்துறை ஏற்பாடு!

77 கோயில்களின் முப்பரிமாண காட்சி! இணையத்தில் அறநிலைத்துறை ஏற்பாடு!

- Advertisement -

இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் 77 கோயில்களின் முப்பரிமாண காட்சியை பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் உள்ளன.

இக்கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். எனவே, பக்தர்களின் வசதிக்காக பூஜைகளை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்வது, இ-உண்டியலில் காணிக்கை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் ஏற்படுத்தப் பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கோயில்களின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சியின் மூலம் பக்தர்கள் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் 77 கோயில்களின் முப்பரிமாண காட்சியை பக்தர்கள் பார்க்கும் வசதி இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் கோயில்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை முப்பரிமாண காட்சி மூலம் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முப்பரிமாண காட்சியின் மூலம் பார்க்கும்போது கோயிலை, சுற்றிப் பார்க்கும் உணர்வு பக்தர்களுக்கு ஏற்படும். தற்போதைக்கு 77 கோயில்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி படிப்படியாக அனைத்து முக்கிய கோயில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe