
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டிருப்பதாலும், வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகத்தில் மழை கொட்டப் போகிறது! இதை அடுத்து, 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சில இடங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. அதே நேரம் வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இரு புறங்களிலும் இந்த இரு கடற் பகுதிகளிலும் இந்த நிலை உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகிறது என்று அறிவிப்பு வெளியிட்டப் பட்டிருக்கிறது. வழக்கம் போல் வடகிழக்கு பருவமழை இரு நாளைக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதனால் வங்கக் கடலில், வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டதால், வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது.

சென்னையில்கூட கன மழை பெய்து ஓய்ந்தது. அதுபோன்று இப்போது மேலும் 7 மாவட்டங்களலும், கன மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. தவிர வேறு சில இடங்களிலும் லேசான மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழகத்துக்கு நல்ல மழையைத் தரும் என எதிர்பார்க்கப் படுகிறது.



