நோவா ஸ்காட்டியா: ஏர் கனடா விமானம் ஒன்று கனடா நாட்டில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. கனடாவின் நோவா ஸ்காட்டியாவின் ஹாலிபேக்ஸ் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. ஏர் கனடாவிற்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 320 விமானம் ஒன்று, 132 பயணிகளுடன் மோசமான வானிலை காரணமாக நீண்ட நேரம் தரையிறங்க முடியாமல் வானில் பறந்தபடியே இருந்தது. பின்னர், விமானம் தரையிறங்கிய போது விமானியால் ஓடுபாதையை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் விமானம் மோதியதால் விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால், ஒட்டுமொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது.
ஏர் கனடா விமானம் ஓடுபாதையில் விபத்து: 25 பேர் காயம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari