ஆபரேஷனின் போது… தீப்பிடித்து கேன்சர் நோயாளி மரணம்!

Published:

operation cancer patient - 2026

ஆப்ரேஷன் நடக்கும்போது நெருப்பு பிடித்து கன்சர் நோயாளி மரணம் அடைந்துள்ளார். அதிர்ச்சிகரமான இந்த விபத்து, ருமேனியாவில் உள்ள புசாரெஸ்டில் ப்ளோரெஸ்கே மருத்துவமனையில் நடந்தது.

66 வயது பெண்மணி கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

டிசம்பர் 22ஆம் தேதி ஆபரேஷனுக்கு முன் பாக்டீரியா நுண்ணுயிர்களை அழிப்பதற்காக மருத்துவர்கள் அந்த பெண்மணிக்கு ஒரு டிசின்பெக்டன்ட் ஸ்பிரே அளித்தார்கள். அதில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்ததால் ஒரு மின்சார உபகரணம் அவர் மேல் பட்டதும் உடலில் நெருப்பு பிடித்துக் கொண்டது. 40% நெருப்பு காயத்தால் உடல் எரிந்து போனது. சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தில் நோயாளி இறந்து போனார்.

operation cancer patient1 - 2026

அவர் மரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

“ஆப்ரேஷன் தியேட்டரில் என்ன நடந்தது என்றோ அதன் விபரீதம் என்ன என்றோ எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அது ஒரு விபத்து என்று மட்டுமே கூறினார்கள்” என்று மரணம் அடைந்தவரின் குடும்பத்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

“மீடியா மூலமாகவே எங்களுக்கு சில விவரங்கள் தெரிய வந்தன. யார் மீதும் தவறு கண்டு பிடிப்பதற்காக அல்ல….. என்ன நடந்தது என்று எங்களுக்கும் தெரிய வேண்டுமல்லவா?” என்றனர்.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப் போவதாக ருமேனியா மருத்துவத் துறை அமைச்சர் விக்டர் கோஸ்டாசே தெரிவித்தார்.

மின்சார உபகரணங்களைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது ஆல்கஹால் உள்ள டிசின்பெக்டன்ட் பயன்படுத்தக்கூடாது என்ற விஷயம் டாக்டர்களுக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்று இணை அமைச்சர் ஹோராதியு மோல்டோவன் கூறினார்.

யுரோப்பியன் யூனியன் நாடுகளோடு ஒப்பிட்டால் மருத்துவத் துறையில் ருமேனியா பிற நாடுகளை விட குறைந்த அளவு தொகையை செலவழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img