ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா தொற்று!

Published:

spain pm wife - 2026

ஸ்பானிஷ் பிரதமர் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி வைரஸ் தொற்றான கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் இதுவரை 1,56,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,835 பேர் உயிரிழந்துள்ளனர். 75,922 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஸ்பெயின் நாட்டில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த தகவல் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோ சான்செஸ் மற்றும் கோம்ஸ் இருவரும் நலமாக இருக்கின்றனர் என்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் அமைச்சர் ஒருவருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது!

முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Begona Gomez, the wife of Spanish Prime minister Pedro Sanchez, has tested positive for corona virus, the prime minister’s office said, adding that both were doing fine:

Related articles

Recent articles

spot_img