கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு காமெடி நடிகர், நேற்று உயிரிழந்தார். இது, திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்குத் திரும்பினர். ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோவும் இதன் பாதிப்புக்கு ஆளானார். பின்னர் குணமாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் உயிரிழந்தார். இவர், ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ், க்ரொக்கடைல் டண்டி, பிளசண்ட் டே, லவ்சிக், தி பிரசிடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மார்க் ப்ளம், சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்ப நண்பர் லீ வில்காஃப் தெரிவித்தார்.