ரமலான் மாதத்திலும்… மெக்கா மசூதிகளில் தொழுகைக்கு தடை!

Published:

mecca 1 - 2026

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் அச்சம் காரணாக புனித ரமலான் மாதத்திலும் மெக்காவில் உள்ள இரு புகழ் பெற்ற புனித மசூதிகளில் தொழுகை நடத்த தடை நீடிப்பதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு தடை விதித்து சவுதி அரேபி அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்குத் தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சவுதி அரேபியில் இதுவரை கரோனாவுக்கு 103 பேர் உயிரிழந்துள்ளனர், 10,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், ரமலான் மாதத்தில் புனித மசூதிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு ஏற்றார்போல் சவுதி அரேபி மதகுரு ஷேக் அப்துல்லா அல் ஷேக் மக்களுக்கு விடுத்த செய்தியில் புனித ரமலான் மாதத்தில் மக்கள் யாரும் மசூதிக்கு வர வேண்டாம். வீ்ட்டிலேயே தொழுகயை மேற்கொள்ளலாம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேண்டுகோள் விடுத்தார்

இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதால் மெக்காவில்உள்ள பெரிய மசூதி, இறைத்தூதர் மசூதி ஆகியவற்றில் மக்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப் பட்டது. அதற்கு ஏற்ப, மெக்காவில் உள்ள இரு புனித மசூதிகளின் தலைவர் ஷேக் டாக்டர் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சுதாயிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் “ மெக்காவில் உள்ள மிகப்பெரிய மசூதி ( மஜ்ஜித் அல் ஹரம்), இறைத்தூதர் மசூதி (அல் மஜ்ஜித் அல் நபாவி)ஆகியவற்றில் ரமலான் மாதத்திலும் தொழுகைக்கு மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மக்களை தொழுகைக்கு அழைப்பது நேரடியாக ஒளிபரப்பப் படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

Related articles

Recent articles

spot_img