
பாகிஸ்தானில், கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
லாகூரில் இருந்து கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத வகையில் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கராச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் 91 பயணிகள் உட்பட 100 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.