
- என் கணவர் எங்கே? போராட்டத்தில் ஈடுபடும் பெண்.
- தெளிவாக கூறாத மருத்துவமனை அதிகாரிகள்.
- அமைச்சர் கேடிஆருக்கு பெண்மணி ட்வீட்.
ஹைதராபாதில் நடந்த சம்பவம். கொரோனா சிகிச்சை தொடர்பாக காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தன் கணவர் எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை என்று அவருடைய மனைவி கவலை தெரிவித்தார்.
தன் இரு மகள்களுடன் சேர்ந்து வனஸ்தலிபுரத்தில் வசிப்பதாக கூறினார். தன் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம் என்றும் தன் கணவரைத் தவிர அனைவரும் வீடு திரும்பி விட்டோம் என்றும் கூறியுள்ளார்.
ஏப்ரல் 27-ஆம் தேதி தன் கணவரை கிங் கோட்டி மருத்துவமனையில் சேர்த்தோம் என்றும் அதன்பின் ஏப்ரல் 30ஆம் தேதி காந்தி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்றும் புதன்கிழமையன்று டுவிட்டரில் அமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்றார்.
மே ஒன்றாம் தேதி தன் கணவர் மரணித்து விட்டார் என்றும் மே இரண்டாம் தேதி அவருக்கு அந்திமக் கிரியைகள் பூர்த்தி செய்து விட்டதாகவும் மருத்துவமனை சிப்பந்தி கூறுகிறார்கள் என்று கூறுகிறார். இந்த விஷயம் குறித்து தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் இறந்த உடலை அடையாளம் காண்பதற்கு கூட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தன் கணவர் குறித்து மருத்துவமனை வர்க்கங்களை கேட்ட போது வென்டிலேட்டர் மீது இருப்பதாக ஒரு தடவையும் இறந்துவிட்டார் என்ற ஒரு முறையும் உயிரோடு இருக்கிறார் என்ற ஒரு தடவையும் கூறினார்கள் என்று கவலை தெரிவிக்கிறார். வருத்தம் அடைகிறார். தன் கணவரின் இறப்பு குறித்த விஷயமாக உதவ வேண்டும் என்று அவர் அமைச்சரை கேட்டுள்ளார்.
ஆனால் மருத்துவமனை உயரதிகாரிகள் நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பில்… பொதுவாக கரோனா வியாதியால் உயிரிழந்தவர்களின் இறப்பு குறித்து அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு தெரிவிப்போம் என்றும் அவர்கள் அந்திமக் கிரியை செய்ய முன்வராத பட்சத்தில் முனிசிபாலிட்டி அங்கத்தினர்களை கொண்டு போலீசார் அவர்களிடம் ஒப்படைத்து இறந்த உடலை எரித்து விடுவோம் என்றும் அதன்படியே இந்த கேசிலும் நடந்தது என்றும் கூறுகிறார்.
மதுசூதன் என்ற 45 வயதான நோயாளியின் மனைவி மாதவி என்ற பெண் இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
செல்பி வீடியோ எடுத்து மீடியாவில் வெளியிட்டுள்ளார். தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா நோய் பரவியது என்றும் தாங்கள் அனைவரும் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அன்று இரவு பதினொன்றரை மணி வரை தன் கணவருடன் டெலிபோனில் உரையாடியதாகவும் தான் வேறு மாடியில் இருந்ததாகவும் தன் கணவருடைய அறை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் ஆனால் இரவு ஒன்றரை மணிக்கு அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் தற்போது என் கணவர் எங்கே என்று கேட்டபோது ஏப்ரல் 30ஆம் தேதி சேர்க்கப்பட்டவர் மே ஒன்றாம் தேதி காலை 6.30 மணிக்கு மரணமடைந்துவிட்டார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தற்போது தெரிவிக்கிறார்கள். அந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது? நன்கு திடமாக இருந்த என் நடுத்தர வயது கணவர் மீது ஏதாவது இவர்கள் பிரயோகம் செய்தார்களா? என்னிடம் அடையாளம் காட்டாமல் என் கணவரை எவ்வாறு எரித்தார்கள்? தற்போது நான் என் குடும்பத்தினருக்கும் என் குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் என்னவென்று சொல்வேன்?
என் கணவர் இறந்துவிட்டார் என்று எந்த ஒரு எவிடென்சும் இல்லாமல் எந்த ஒரு அத்தாட்சியும் ஆதாரமும் இல்லாமல் நான் எவ்வாறு தெரிவிப்பேன்? நான் எவ்வாறு நம்புவேன்? அனாதைப் பிணம் போல் என் கணவரின் உடலை இவர்கள் எவ்வாறு எரித்தார்கள்? நாங்கள் ஆரிய வைசிய சங்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கென்று விதிமுறைகள் உள்ளன.
இவர்கள் யாரோ ஒரு அனாதை பிணத்தை எரித்து விட்டு என் கணவர் தான் இறந்தார் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவர்கள் அதற்கான புரூஃப் எனக்கு காட்ட வேண்டும். மெடிக்கல் ரிப்போர்ட் காட்டவேண்டும். சிசிடிவி புட்டேஜ் காட்ட வேண்டும். அவர் மீது ஏதாவது மருத்துவ பிரயோகங்கள் செய்தார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். அவர் இறந்ததற்கான பேப்பர்களை காட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

“மருத்துவமனை தரப்பு கூறுவதோ, கொரோனாவால் இறந்த போது என்னிடம் இறந்த விஷயத்தை சொன்னால் நான் ஷாக் ஆகி விடுவேன் என்று கூறுகிறார்கள். இவ்வாறு மருத்துவமனை அதிகாரிகள் பேசுவது வியப்பை அளிக்கிறது. கணவன் இறந்த செய்தியை மனைவிக்கு கூறக் கூடாதா? மனைவி ஷாக்காகி விட்டுப் போகிறாள்…”என்று புலம்புகிறார் 42 வயதான இந்தப் பெண்மணி.
மருத்துவ பணியாளர்களைக் கேட்டபோது அவர்கள் இன்னும் ஒன்று கூறுகிறார்கள். அதாவது இறந்தவரின் உடலை மார்ச்சுவரியில் வைக்க முடியாது…. கொரனா தொற்றுநோயால் இருந்தவர் என்பதால்… என்கிறார்கள்…
மீதம் உள்ள அவர் குடும்பத்தின் நோயாளிகள் எத்தனை நாட்களில் குணம் அடைவார்கள் என்றும் தெரியாது. அதோடுகூட இறந்த உடலை காண்பிப்பதற்காக இந்த நோயாளியை வெளியில் அழைத்துச் செல்லவும் முடியாது. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்தன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
“ஆனால் நான் இந்த விஷயத்தை சும்மா விட போவதில்லை. சுப்ரீம் கோர்ட்டு ஐகோர்ட்டு எல்லா இடத்திலும் போய் இதற்கான நீதியை கேட்கப் போகிறேன்” என்று அந்தப் பெண் செல்பி வீடியோவில் தெரிவித்துள்ளார்.