ஜலதோஷம் வந்தாலும் மணம் தெரியாது.. கொரோனாவுக்கும், ஜலதோஷத்திற்கும் என்ன வித்தியாசம்? நிபுணர்கள்!

Published:

cold

ஜலதோசம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையே வாசனை, சுவை இழப்பில் உள்ள வித்தியாசம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணம் என்றும் மருந்து சாப்பிடாவிட்டால் ஒருவாரத்தில் குணம் என்றும் வேடிக்கையாக ஒரு பழமொழி இருக்கிறது. மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் இருக்கின்ற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் நம்மிடமிருந்து ஓடிவிடும்.

சாதாரண காலங்களில் ஜலதோஷம் வந்தால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அதனால் வாசனையை நுகர முடிவதில்லை. நாக்கு சுவை இழக்கிறது. அதனால்தான் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ” நாக்கிற்கு சுவையே தெரியவில்லையே, எதை சாப்பிடுவது?” என்று அல்லல்படுகின்றனர்.

இது கொரோனா காலம் என்பதால் அதற்கு வாசனை இழப்பும், சுவை இழப்பும் அறிகுறிகளாக பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களிடம் சாதாரணமாக ஒரு கேள்வி எழுகின்றது.

ஆனால் அது அர்த்தமுள்ள கேள்வி தான். வாசனையும், சுவையும் இழக்கிற போது அதனை சாதாரண ஜலதோஷம் என எடுத்துக் கொள்வதா? இல்லை கொரோனா என கருதுவதா? இரண்டுக்கும் வேறுபாடு காண்பது எப்படி? என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்விக்கு விடை காணும் வகையில், இங்கிலாந்து நாட்டில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி இருக்கின்றனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அந்த ஆராய்ச்சி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்ற போது, மூளையும் மத்திய நரம்பு மண்டலம் பாதிப்பு அடைகின்றன என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளில் ஒருவனான காரல் பில்போட் இதுகுறித்து கூறும்போது, ” கொரோனா பாதிப்பின் முக்கிய அடையாளம், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகும். ஆனால் இது மோசமான ஜலதோஷம் இருப்பதற்கான பொதுவான அறிகுறி ஆகும். கொரோனா மற்றும் சாதாரண ஜலதோஷம் ஆகிய இந்த இரண்டிற்கும் உள்ள வாசனை, சுவை இழப்புக்கு இடையே இருக்கின்ற வித்தியாசத்தை கண்டறிவது தான் எங்கள் ஆய்வின் முக்கிய நோக்கம்” என்று கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகள் 10 பேர், மிகவும் மோசமான ஜலதோஷம் பாதித்த 10 பேர், உடல் ஆரோக்கியமான 10 பேர் ஆகியோரை இந்த விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளது.

இந்த முப்பது பேருமே ஒரே வயதினர் மற்றும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் வாசனை மற்றும் சுவை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் பிற சுவாச வைரஸ்களுடன் கொரோனா வைரஸ் மாறுபட்டு செயல்படுகின்றது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் வாசனையை அறியும் திறன் மிக மிகக் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா நோயாளிகளால், கசப்பு மற்றும் இனிப்பு சுவைகளை அடையாளம் காண முடியவில்லை.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

அதனால் விஞ்ஞானிகள் இதுபற்றி கூறுகையில், ” இதுதான் உண்மையான சுவை இழப்பு. இதுதான் கொரோனா நோயாளிகளுக்கும், சாதாரண ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசம்” என்று கூறியுள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானி காரல் பில்போட் கூறுகையில், ” இந்த சோதனைகள் உற்சாகம் அளிக்கின்றன. ஏனென்றால் இந்த சோதனை மூலமாக கொரோனா நோயாளிகளுக்கும், சாதாரண ஜலதோஷம் பாதித்த அவர்களுக்கும் இடையே வித்தியாசத்தை காட்ட முடிகிறது. இந்த சோதனைகள் தொண்டையில் அல்லது மூக்கில் இருந்து சளி மாதிரியை எடுத்து சோதனைக்கு மாற்றாக இல்லை என்கிற போதும், வழக்கமாக சோதனைகள் கிடைக்காதபோதும் அவசரகால துறைகளின் அல்லது விமான நிலையங்களில் இதனை பயன்படுத்த இயலும்” என்று அவர் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img