
தென் ஆப்பிரிக்காவில் 80 வயது நபரை 29 வயது இளம் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க Terzel Rasmus என்ற பெண் தன்னை விட 51 வயது மூத்தவரான 80 வயது மதிக்கத்தக்க Wilson Rasmus என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து Terzel Rasmus தெரிவிக்கையில், ‘கடந்த 2016-ஆம் ஆண்டு செய்தித் தாள் நிகழ்ச்சி ஒன்றில் தான் அவரை பார்த்தேன். அவர் தான் முதலில் என்னை கவனித்தார். நிகழ்ச்சியின் போது என் அருகில் வந்து உட்காரலாமா என கேட்டார். முதல் சந்திப்பே இருவருக்கும் ஒரு ஈர்ப்பை கொடுத்தது.

இருவரும் அதன்பின் அடிக்கடி பேசிக்கொண்டோம். தொடர்ந்து டேட்டிங் சென்றோம். அவருக்கு பேர குழந்தைகள் எல்லாம் இருந்த போதும் அவருடைய காதல் மிக அழகாக இருந்தது. அவர் என்னை நன்றாக கவனித்து கொள்வார். ஒருவருடம் பழகிய பின்பு திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த திருமணத்திற்கு Terzel Rasmus பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர். Wilson Rasmus தன்னுடைய 56 வயது மகளை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டார்.

Terzel Rasmus படிப்பு செலவுகளையும் Wilson Rasmus கவனித்து வருகிறார். இருவரும் வெளியில் சென்றால் மகள்-தந்தை என்று சில கூறுவதாகவும், ஆனால் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் காதல் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.



