ஆடையை அகற்றி அத்துமீறிய காப்பக ஊழியர்! கண்ணால் கண்ட காட்சியால் கதறிய மகன்!

Published:

Archive employee 1 - 2026

அமெரிக்காவில் காப்பகத்தில் வசிக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காப்பக ஊழியர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் நபர் ஒருவர் , மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தாயை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளார்.

அந்த நபர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் தனது தாயின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவதற்காக அவர் தன் தாய் இருக்கும் அறையில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அறைக்கு வந்த காப்பக ஊழியர் அந்தப் பெண்ணின் உடைகளை கழற்றி தவறாக நடந்துருக்கிறார்.

இதனை கண்காணிப்பு கேமராவின் வழியாக பார்த்த அவரது மகன் உடனடியாக அந்த ஊழியரிடம், “நீ செய்வது தவறு. உடனடியாக அதை நிறுத்து” என்று கத்தியுள்ளார். பின்னர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். ஆனால் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் எதையும் சொல்ல முடியாமல் குழம்பியுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சாட்சியாக கொண்டு அந்த காப்பக ஊழியர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Related articles

Recent articles

spot_img