ஜூம் மீட்டிங்கில் ஆடையின்றி வந்த எம்.பி! நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி!

உலகம் சற்றுமுன்
William
William

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலக சந்திப்புகள் மட்டுமின்றி ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கூட ஆன்லைன் வழியே நடத்தப்பட்டு தேவையான விவாதங்கள் செய்யப்பட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வட அமெரிக்க நாடான கனடாவில் வீடியோ கான்பரன்சிங்கின் போது நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்.பி.,க்கள் பலரும், வீடியோ கான்பரன்சிங் வழியே பங்கேற்று வருகின்றனர்.

ஜூம் கால் (Zoom call) மூலம் சில கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீடிங்கில் பங்கேற்று இருந்தனர். ஜும் கால் சந்திப்பின் போது கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாரதவிதமாக நிர்வாணமாக ஸ்கிரீனில் தோன்றியதால் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கனடாவின் லிபரல் பார்ட்டியின்( Liberal Party) நாடாளுமன்ற உறுப்பினர் 46 வயதான வில்லியம் அமோஸ் (William Amos) எனபவரே இவ்வாறு திரையில் தோன்றி உள்ளார். கையில் மொபைல் போனுடன், ஒரு டேபிளுக்கு பின் வில்லியம் அமோஸ் நிர்வாணமாக நின்ற ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடலில் உடை ஏதும் போடாத நிலையில் நல்ல வேளையாக தனது அந்தரங்க பகுதியை கையிலிருக்கும் மொபைலை வைத்து அவர் மறைந்துள்ளது போன்று காட்சிகளே பொதுவெளியில் பரவி உள்ளன.

இதனை அடுத்து நாட்டின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வீடியோ கான்பரன்சிங்கில் சகிக்க முடியாத வகையில் நிர்வாணமாக தோன்றிய எம்.பி வில்லியம் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி எம்.பி-க்கள் பலரும் கோரியுள்ளனர்.

தனது இந்த செயல் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வில்லியம், இது எதிர்பாராவிதமாக நடந்து விட்டது. வாக்கிங் சென்று விட்டு நான் போட்டிருந்த உடைகளை மாற்றிய போது இந்த சம்பவம் நடந்து விட்டது.

நான் மிகவும் துரதிர்ஷ்டவசமான தவறைச் செய்து விட்டேன், வெளிப்படையாக வெட்கப்படுகிறேன். சபையில் உள்ள எனது சக ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

mp William
mp William

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.