
கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவது ஆகிய புதிய இயல்பாக மாறிவிடான. இதனிடையே பல வகையான மாஸ்க்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் மிகவும் விலையுயர்ந்த மாஸ்க்கை பற்றி பார்க்கலாம்.
யுவல் (Yuval) கோவிட் -19 பாதுகாப்பு மாஸ்க் என்பது உலகின் மிக விலையுயர்ந்த மாஸ்க். இந்த மாஸ்க்கின் விலை $ 1.5 மில்லியன் ஆகும். இந்த முகமூடியை இஸ்ரேலின் பழமையான நகை நிறுவனமான யுவால் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தனித்துவமான மாஸ்க் பல விலைமதிப்பற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதே போல குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு நகைக் கடை சிறப்பு மாஸ்க்களை உருவாக்கியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் மாஸ்க்கள் 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்கும். இந்த முகமூடிகளில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இது லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது..
முன்னதாக கடந்த ஆண்டு லாக்டவுன் அமலில் இருந்த போது, புனேவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவிலிருந்து தப்பிக்க தங்க மாஸ்கை உருவாக்கினார். இதனை தயாரிக்க சுமார் 2 லட்சம் 90 ஆயிரம் ரூபாய் செலவவானது.. அதன் எடை சுமார் 5.5 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது..